குழந்தை வளர்ப்பு ...... என் வழி .....
மனதில் உள்ளவைகளுக்கு எழுத்து வடிவம் தர நம்மால் முடியுமா என்று என்னுள் எழுந்த ஒரு நீண்ட போராட்டத்திற்குப்பிறகு... இதோ என் முதல் பதிவு..
இன்றைய வளர்ந்து வரும் சமுதாய சூழலில், பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை நேர் வழியில் நடத்திச்செல்வது என்பது ஒரு ஒரு பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இதனை நேர்த்தியாக செய்ய, யாராவது ஒருவரை எடுத்துக்காட்டாக காண்பிப்பது ஒரு நல்ல யுக்தியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது
.
அந்த ஒருவர், ஒரு விளையாட்டு வீரராகவோ அல்லது ஏதோ ஒரு துறையில் பிரபலமானவராகவோ, சாதனையாளராகவோ இருக்கலாம். மேற்படி உதாரணங்கள் அனைவரின் வாழ்விலும் மாற்றங்களைகொண்டு வராவிட்டாலும்,
சிலர் மனதில் ஒரு சிறிய அளவிலேனும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
ஒருவரை ரசிக்கவும், பின்பற்றுவதற்கும் காரணங்கள் பல. பெரும்பாலாக சினிமா போன்ற ஆதிக்கம் மிகுந்த ஒரு துறையில் இருப்பவர்கள் தான் மக்களால் போற்றப்படும் இடத்தில் இருந்து வருகிறார்கள் என்றாலும் அந்த துறையை சாராத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் மிகக்குறைவானவர்களே எனினும் அவர்களுடைய நற்பண்புகளுக்காகவே போற்றப்படுகிறார்கள்.
தன்னடக்கம், கீழ் படிதல், நேர்மை, மரியாதை, பணிவு, அறிவு, திறமை, நேர் பார்வை, அணுபவம், துணிவு என்று தனி தனியக சொல்வதும் ஒன்று தான், சின்மயி என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுவதும் ஒன்று தான்.
'ஓ நீ சின்மயி-யின் ரசிகை' என்று கூறுவீர்கள்; ஆம், அவரின் பாடல்களுக்காக மட்டும் அன்றி, மேற் கூறிய அவரின்குணநலன்களுக்காகவும் நான் அவரின் குதூகலமான ஒரு ரசிகை.
நாம் உணர்ந்திருப்பதை விட, சின்மயியும் அவரின் தாயார் திருமதி பத்மாசினி அவர்களும் நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருகிறார்கள். இம்மாதிரியான நல்லோரின் நட்பு கிடைப்பதும் அதிர்ஷ்டமே. சின்மயியின் பதிவுகளை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். அவரின் பாடல்களுக்கு மட்டுமில்லாது அவரின் எழுத்துக்கும் ரசிகராகிவிடுவோம்.
சொல்வதற்க்கு இன்னும் நிறையவே இருக்கிறது என்றாலும், என் பதிவை இத்துடன் முடித்து கொள்கிறேன். அடுத்த பதிவுகளை, வாசகர்கள், இனி வரும் நாட்களில், தொடர்ந்து எதிர் பார்க்கலாம்.
இந்த ஒரு முயற்ச்சி, எனக்கு தெரிந்த சில நல்ல விஷயங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. அதை இந்த பதிவின் மூலம் செய்துள்ளேன் என்று நம்புகிறேன்…
இதை படிக்கும் வாசகர்களுக்கு….விடை பெரும் முன், ஒரு பணிவான வேண்டுகோள், என் கருத்துக்கள் உங்கள் கருத்துகளுடன் ஒற்று போகாமல் (ஒவ்வாமல்) இருந்தால் தயவு கூர்ந்து இதை தவிர்த்து விட்டு சென்றுவிடுங்கள.பிடித்திருந்தால் உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்……
நன்றிகளுடன்
ப்ரியா