Thursday, 31 December 2015

நாளையின் விடியல் by Priyadharshini Madhavan

நாளையின் விடியல்
புதிதாய் உதிக்கட்டும்
வெண் மேகங்கள் ப்ராகாசிக்கட்டும்
காரிருள் விலகட்டும்

பூங்காற்று சாமரம் வீசட்டும்
இயற்கையின் சீற்றம் தனியட்டும்
பாரெங்கும் நறுமணம் வீசட்டும்

மனித இதயங்கள்
இனிதாய் பிறக்கட்டும்
நேசங்கள் பெருகட்டும் - எங்கும்
மனித நேயம் பரவட்டும்

த்வேஷங்கள் விலகட்டும்
பாசங்கள் தொடறட்டும்
யுத்தங்கள் ஓயட்டும்
அநியாயங்கள் மழியட்டும்
பாரில் அமைதி தழுவட்டும்

மூடங்கள் மறையட்டும்
அறியாமை அகலட்டும்
மெய்ப்பொருள் ஒளிறட்டும்
காமுகன்கள் அழியட்டும்
கனவான்கள் மிளிறட்டும்

நாண் மக்கள் மேன்படட்டும்
எங்கும் சிரிப்பொலி நிறையட்டும்
அழுகொலி அனைத்தும் ஓயட்டும்
வைய்யம் தோறும் இல்லங்கள் செழுப்படையட்டும்