"1994 - A Love Story"
Pleasant Climate outside and it takes me back by 22 years. August மாதம் வந்தாலே மனம் பின் நோக்கி பாய தொடங்கி விடும், ராஜாவின் (இளையராஜா-வின்) வயலின் /கிடார்-இன் இன்னிசைகளுடன்..!! :-) :-)
1994-August மாதம், அரி, அரண், மற்றும் கங்கையின் பிறப்பிடம் நோக்கி இமய மலைத் தொடரில் ப்ரயாணம். மெல்லிய சாரல், அழகும், ஆபத்தும் நிறைந்த மலைப்பாதை. ஒரு புறம் நம் கர்வத்தை உடைக்கும் விதமாய் ஓங்கி ஒய்யாரமாய் உயர்ந்து நிற்க்கும் மலை தொடர்கள். மற்றொரு புறமோ - "ஓஓ" என்று இரைச்சலுடன் கர்வமாய் கட்டுக்கு அடங்காமல் சீறி பாயும் "மந்தாகினி - பாகிரதி". இந்த அழகில் மயங்கி நான் ப்ரம்மித்து நிற்க, மேலும் என்னை கிறங்க வைக்கும் விதமாய் நாங்கள் ப்ரயாணம் செய்யும் பஸ்ஸில் நான் குடுத்த casette-இல் இருந்து PANKAJ UDHAS-இன் சொக்க வைக்கும் கஜல் - "Saawan ke suhane Mausam Mein..." என்று பாட துவங்குகின்றது. Perfect with the Trip & Mood..னு சொல்லுவாளே அந்த மாதிரி...!!! "சொர்கம் என்றால் இது தானோ ??!!" என்று எண்ண தோணுகிறது.
இது தான் அப்போது 18 வயதே ஆகி இருந்த எனக்கு இமய மலையின் மேல் தீரா காதல் வர காரணமாய் இருந்த முதல் பயணம்.
இதற்க்கு பின் பல முறை, பல் வேறு மாநிலத்தில் இருந்து (Kashmir, Himachal, Nepal, Garhwal, Kumaon, Darjeeling, Sikkim, Assam, Meghalaya) ஏன் சீன எல்லை வரை சென்று, பல் வேரு விதமான கோணத்தில் இருந்து எல்லாம் இவளின் அழகை ரசித்திருந்தாலும், Garhwal பகுதியில் இவளின் அழகோ தனி அழகு. அந்த அழகை காண கோடி கண்கள் வேண்டும். இதை கண்ட மாத்திரத்தில் என் மனம் நெகிழ்ச்சியில் "என்ன தவம் செய்தனை" என்று பாட துவங்க..அப்பப்பா இந்த சுகானுபவத்தை வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க இயலாது, பார்த்து அனுபவித்தால் தான் புரியும். ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்லனும் என்றால் - "Euphoric..!!!"
One needs to experience its magnificence to understand my Euphoria. And if once experienced...it will be cherished for a long long time...may be for lifetime...
இரண்டு நாட்களுக்கு பின் ஒரு நீண்ட நெடும் ப்ராயணத்திற்கு அப்பறம் கேதார்நாத்தின் பேஸ் காம்ப் பகுதி ஆன கௌரிகுண்ட் சென்றடைந்தோம். (ப்ரயாணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், கேதார், பத்ரீ, கங்கோத்ரி பற்றி எல்லாம் இனி வர போகும் என் அடுத்த பகுதிகளில் விவரிக்கிறேன் - இந்த பதிவு என் காதலை ;-) பற்றியது மட்டுமே )
இமய மலையின் மீது பாதம் பட்ட உடன் எனக்கே தெரியாமல் என் உடலில் ஒரு தனி புத்துணர்ச்சி. ஒரு இனம் புரியா நெகிழ்வு. அன்னையின் அரவணைப்பில், அவளின் மடியில், கிடைக்கும் சுகம் போல், ஒரு தனி வருடலுடன் இதமான சுகம். மனம் இலகுவாகி குதூகலத்துடன் சிறகடித்து பறக்க அரம்பித்து விட்டது. மனதில் இருக்கும் சோகங்கள், கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போயின [18-ஏ வயது ஆன பெண்ணிற்கு என்ன சோகம், கஷ்டம் எங்கறீங்களா ?? எவ்வளவோ இருக்குங்க :P ]. இது தான் இவளின் தனித்துவம், இல்லை இல்லை, ரகசியம் கூட. இந்த பயணத்தின் போது நிறைய ஆபத்தான மற்றும் பதட்டமான தருணங்களை சந்திக்க நேறிற்று இருந்தும் அவை எல்லாம் துளி கூட என் உணர்வை மாற்ற வில்லை மாறாக என் காதலை பன் மடங்கு கூட்டியதே தவிர இம்மியும் குறையவில்லை.
இன்று பின் நோக்கி பார்க்கையில், அந்த பயணத்தில் தான் வாழ்க்கையை பற்றின என் கண்ணோட்டம் மாற ஆரம்பித்திற்கான விதை விதைக்க பட்டதோ என்று நினைக்க தோணுகிறது. ஒன்னு மட்டும் நிச்சயம்ங்க - இயற்க்கையின் அழகை ரசிப்பவர்களுக்கு , ஆராதிப்பவர்களுக்கு மட்டும் தான் இதை உணர முடியும். இந்த ப்ரயாணத்தின் போது எங்களோடு 100 பேர் பயணித்தார்கள். எல்லோருக்கும் இந்த பிரம்மிப்பு ஏற்பட்டதா, இந்த அனுபவத்தை உணர்வுபூர்ணமாய் உணர்ந்தார்களா என்று கேட்டால் இல்லை என்று தைரியமாய் சொல்வேன். ஏனென்றால் அதை கண்ணெதிரே பார்த்தேன். இப்படி சொல்வதை திமிர் என்று எடுத்து கொள்ளாதீர்கள். இது திமிரால் வரும் வார்த்தைகள் அல்ல, ஏக்கத்தால் வரும் கோபத்தால் வருபவை.
அது வரையில் மிகவும் விளையாட்டுத்தனமா இருந்த எனக்குள் அந்த பயணம் ஒரு சிறு சலனத்தை / மாற்றத்தை உண்டாக்க துவங்கியது. கர்வங்கள் குறைய தொடங்கின. இயற்க்கையின் முன் நாம் வெறும் அற்பர்கள் என்ற உண்மை புரிய ஆரம்பித்த தருணம் அதுவே. இதனால் தான் சித்தர்களும், ஞானிகளும், அனைத்தும் துறந்து இவளின் அரவணைப்பில் தஞ்சம் புகிர்கிறார்களோ ???!!! :-)
இதற்க்கு பின் மீண்டும் 2001-ம் ஆண்டு என் 4 மாத கை குழந்தையுடன் இமயமலையின் (Garhwal) அரவணைப்பில் இளைப்பார வாய்ப்பு கிட்ட, அது அவள் ஏற்படுத்திய தாக்கத்தை மேலும் மேலும் தான் அதிகரித்தது. 4 மாத கை குழந்தையுடன் இமயமலை யாத்திரை போக போகிறேன் என்று தெரிந்தவுடன் பல பேர் என்னை திட்டினார்கள், உனக்கு பித்தா என்று கூட கேட்டார்கள்..!! ஆம் பித்து தான்...இமயத்தின் மேல் உள்ள பித்து என்றேன். நான் கண்ட அந்த கண் கொள்ளா காட்சி, நான் பெற்ற அந்த அனுபவம் இந்த சிறு வயது முதலே கண்டால் தான் என் பெண்ணும் இதே காதலுடன் வளருவாள் என்று சொல்லி அவளை தூக்கி கொண்டு சென்றேன் - என் கணவர், என் மாமியாரின் உறுதுணையுடன். :-)
இன்றும் யாரவது நான் பத்ரி-கேதார் யாத்திரை போகிறேன் என்று சொன்னால் என் மனம் மீண்டும் அவளின் மடியில் துள்ளி விளையாட பரிதவிக்க ஆரம்பித்து விடும். அவ்வளவு காதல்....!!! :-) ;-)
இனி வரும் நாட்களில், என் ப்ரயாண (காதல்) அனுபவங்களை இந்த பக்கத்தின் மூலம் தங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ளேன்...படித்து மகிழவும்.
Love story continues...22 வருடங்களாய் தொடரும்/வளரும் காதல் கதை ....and My Expeditions would continue too........ chow