Appa’s Sadabishegam - 01.12.2021 - a little write up I had penned for the Nithya-anusandhanam book we had printed on this special occasion as part of return gift.
இன்று சதாபிஷேகம் காணும் எங்களின் திரு தகப்பனார் K.T.P. என்று அன்போடு அழைக்கப்படும் திருகந்தாடை திருவேங்கடாச்சாரி பார்த்தஸாரதி அவர்கள் திருக்கச்சி அருகில் இருக்கும் செய்யாறு தாலுகா கொடநகர் கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவர்.
1941ம் வருடம் கார்த்திகை மாதம் சித்ரா நக்ஷத்திரத்தில் (16.11.1941) திரு கே.ஜி. திருவேங்கடாச்சாரி (Village Munsif/Yogi) மற்றும் திருமதி செம்பகவல்லி (பூர்விகம் கீழத்தூர், 44வது பட்டம் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் அவரின் பூர்வாஸ்ரம உறவு) அவர்களின் மூன்றாவது குழந்தையாய், முதல் பிள்ளயாய் அவதரித்தார். வெகு வருடங்களாய் ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்களின் பாட்டி, அப்பொழுது சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த குடுகுடு தாத்தா என்று அழைக்கப்படும் அவரின் தகப்பனாரின் அறிவுறுத்தலின் பேரில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு நெய்யால் மொழுகி சர்க்கரை மாவால்கோலமிட்டு ப்ரார்த்தனை செய்த பலனாய் ஆண் வாரிசு பிறந்த காரணத்தால் எங்கள் தகப்பனாருக்கு இந்நாமகரணம்.
பெயருக்கு ஏற்ராற்போல் செய்யாறு ஹை ஸ்கூலில் SSLC முடித்து விட்டு, குடுகுடு தாத்தாவின் சிபாரிசில் சென்னை திருவல்லிக்கேணி ஹனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வந்த வக்கீல் அமுதாச்சாரி அவரிடம் கிளார்க் வேலையில் சேர்ந்தார். பின் நாளில் அவர் இடத்தில் கிடைத்த இந்த கோர்ட் அனுபவமே, எங்கள் தகப்பனாரின் வாழ் நாளில் மிக முக்கிய பங்காகவும், நற் பெயர் வாங்கி தரும் அளவிற்க்கும் அமைந்தது.
ஐந்து வருடம் கழித்து 1963ம் வருடம் அவரின் அத்திம்பேர் திரு T.S. ஸ்ரீனிவாசன் அவரின் வழிகாட்டுதலின் பேரில் Avadi, Ordnance Clothing Factory (OCF)ல் பணி நியமணம் ஆனார். அங்கே 28 வருடங்களுக்கு மேலாக Vigilance & Legal Sectionல் பணி ஆற்றும் படியாக அமைந்த போது பல High Court, Supreme Court Standing Counsels, ASGs உடன் Department கேஸ்காக liase செய்து பணி ஆற்றும் வாய்ப்பு அமந்தது. ஒரு Supreme Court கேஸில் இவர் தந்த சில முக்கியமான குறிப்புகள்/உள்ளீடுகள், அந்த கேஸ் வெற்றி பெறுவதற்க்கு பெரும் பகுதியாக அமைந்ததால் இவருக்கு Departmentல் இருந்து சிறப்பு விருது கிடைத்தது. இது மற்றும் இல்லாமல் பல் வேறு கேஸ்களில் இவர் ஆற்றிய பங்கிற்க்காக பல முறை அவரின் GM மற்றும் பிற உயர் அதிகாரிகள், Standing Counsels இடம் இருந்து பல் வேறு தருணங்களில் பாராட்டுதல்கள் பெற்றுள்ளார். இவ்விதமான கௌரவங்களுடன் 38 ஆண்டுகள் பணி செய்த பின்னர் 2001ம் வருடம் (30.11.2001) OCFல் இருந்து பணி ஓய்வு பெற்றார்.
இதற்க்கு இடையே டிசம்பர் 1966ல் (15.12.1966) இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த A.M. Jain College Tamil Head of the Department மற்றும் Madras University Senate Member திரு S.V. வரதராஜ ஐயங்காரின் இரன்டாவது புத்ரி ராஜலக்ஷ்மியுடன் விவாஹம் நடைபெற்றது. திருச்சி உறையூரை பூர்வீகமாககொண்ட எங்களின் தாத்தா திரு S.V. வரதராஜ ஐயங்கார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவிடந்தை கோவில் மற்றும் பார்த்தன்பள்ளி கோவில்களில் Trustee ஆகவும் இருந்தார். அப்பொழுது இருந்த தமிழ்எழுத்துலகில் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் திரு சாண்டில்யன், மா.போ.சி போன்றோரை கொண்டிருந்தவர்.
இத் தம்பதியர் மே 1968ல் ஒரு ஆண் வாரிசும், அக்டோபர் 1976 விஜயதமியில் ஒரு பெண் வாரிசாலும் ஆசிர்வதிக்க பெற்றனர். இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி மூன்று பேத்திகள் உள்ளனர். இவர்கள் தங்களின் 55 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் திருவல்லிக்கேணி, திருவள்ளுர், வில்லிவாக்கம், ஆவடி அருகில் உள்ள அண்ணணுரில் வசித்து விட்டு தற்போது மீண்டும் திருவல்லிக்கேணியிலே குடியேறிஉள்ளனர்.
அவர் OCFல் பணி ஆற்றி கொண்டிருக்கும் போதே, தன் சக பணியாளர்கள் / நண்பர்கள் உடன் சேர்ந்து 1976ல் OCF Friends Club ஒன்றை துடங்கி 4 வருடங்களுக்கு ஒரு முறை (LTC Block), All India Tour ஏற்பாடு செய்து வந்தார். இவரின் இந்த முயற்சியின் பலனாய் Friends Clubல் உள்ள குடும்பத்தார் காஷ்மீர் முதல் குமரி வரை, சோம்நாத் முதல் மேகாலயா வரை மற்றும் இரு விதமாக Char Dham என அழைக்கப்படும் – 1. Badrinath, Dwaraka, Puri & Rameswaram & 2. Uttarakand-ன் Badrinath, Kedarnath, Gangotri & Yamunotri, என காண கிடைக்காத இடங்களுக்கு எல்லாம் சென்று வந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் எங்களின் தகப்பனாரருக்கு பெருமாளின் கடாக்ஷத்தால் 108 திவ்யதேசத்தின் மிக கடினமான பாதை கொண்டிருக்கும் முக்தி க்ஷேத்ரமான திரு சாளக்ராமம் (முக்திநாத்)க்கு 2 முறை (2012 & 2014) மற்றும் 69வது க்ஷேத்ரமான திருவாதிரி (ஸ்ரீபத்ரிநாத்)க்கு 3 முறையும் (1994, 2001 & 2013) சென்று சேவை காணும் பாக்கியம் கிட்டியது.
ஜூன் 1985ல் இத்தம்பதியினர் சொந்த வீடு ஒன்று அம்பத்தூர் அருகில் இருக்கும் அண்ணனுர்ல் கட்டிகுடியேறினர். அங்கே குடிபெயர்ந்த பின்னர் எங்களின் தகப்பனார் அங்கே இருந்த சில நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஏரியாவை மேம்படுத்த Siva Sakthi Nagar Welfare Association என்று நிறுவி அதன் Founding President ஆக சுமார் 15 ஆண்டுகாலம் நிர்வகித்தார்.
அண்ணனுரில் குடி ஏறிய சில வருடத்தில், தங்கள் நகரில் ராமர் கோவில் ஒன்றை அமைக்க வேண்டும் என்றஅவா இவருக்கு ஏற்பட்டது. அதற்க்கு ஏற்றாற்போல் நாங்கள் வீடு கட்ட நிலம் வாங்கிய புரோக்கரிடமே ஒரு சிறிய நிலம் கடைசியாக மிச்சம் இருந்தது தெரிய வந்தது. உடனே தன்னுடன் welfare association-ல் கூடஇருந்த ஒரு சில சக office bearers மற்றும் ஏரியாவில் இருந்த இன்னும் சில நண்பர்கள் உடன் சேர்ந்து Sri Ram Sath Sang என்ற ஒரு Trustஐ நிறுவி அதன் Managing Trustee ஆக பொறுப்பு ஏற்று அந்த நிலத்தை ஸ்ரீகோதண்டராமர் கோவில் கட்ட பதிவு செய்து பூமி பூஜை செய்தார். பத்து ஆண்டு காலம் பெரும் இன்னல்கள், தடைகளை தாண்டி, பல் வேறு நல் உள்ளங்களின் உதவியால் கோவில் கட்டுமானம் படி படியாக துவங்கி பின்னர் 1st Feb 1998 அன்று ஸ்ரீ கோதண்டராமர் கோவில் ஸம்ப்ரோக்ஷணம் சிறப்பாய் நடைபெற்றது.
மேலும் 2001ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவுடன் முழு நேரமாய் தன் மாமனாரை போலவே கோவில் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டு பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய தொடங்கினார். மேலும் 2004ம் ஆண்டில் கோவில் அருகில் இருந்த தன் சொந்த நிலத்தில் இருந்து ஒரு பகுதியை கோவிலுக்கு தந்து அதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பது போல், ஸ்ரீ தேசிகன், கருடன் சமேத ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்க்கு என்று தனி சந்நதி தன் சொந்த செலவில் அமைக்கும் பாகியத்தையும் பெற்றார். முதல் ஸம்ப்ரோக்ஷணம் நடந்து 21 வருடங்களுக்கு பிறகு, அன்மையில் 2019 ஆண்டில் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலின் இரண்டாவது ஸம்ப்ரோக்ஷணமும் வெகு சிறப்பாய் நடைபெற்றது.
இவ்வாறாக தன் வாழக்கையை நேர்த்தியாக வாழ்ந்து வந்த இந்த சுவாமி தான் இன்று சதாபிஷேகம்காண்கிறார். இதில் பங்கேற்க வந்த அனைவருக்கும் எங்கள் அனைவரின் நன்றியை திருவித்து கொள்கிறோம்.
Some Photographs from the Function held at Annalakshmi Restaurant Banquet Hall on 01.12.2021.
PS : All the water used for the Theerthabishegam of the Couple was exclusively sourced from the Holy Rivers of :-
1. Bhagirathi River at Gangotri, Uttarakhand
2. Alaknanda River at Badrinath, Uttarakhand
3. Gandaki river at Mukthinath, Nepal
4. Ganga at Hardwar, Uttarakhand
5. Triveni Sangam (confluence of Ganga, Yamuna & Saraswathi) at PrayagRaj (Allahabad), UP
6. Cauvery River at Talacauvery, Coorg, Karnataka
7. Vaigai River at Madurai, Tamilnadu
8. Krishna River at Vijayawada, Andhra Pradesh
9. Holy water from Tirumala
2. Alaknanda River at Badrinath, Uttarakhand
3. Gandaki river at Mukthinath, Nepal
4. Ganga at Hardwar, Uttarakhand
5. Triveni Sangam (confluence of Ganga, Yamuna & Saraswathi) at PrayagRaj (Allahabad), UP
6. Cauvery River at Talacauvery, Coorg, Karnataka
7. Vaigai River at Madurai, Tamilnadu
8. Krishna River at Vijayawada, Andhra Pradesh
9. Holy water from Tirumala