Sunday, 24 April 2022

அப்பா….!!!



அப்பா இம் மந்திர சொல் இட்டு

யாரை இனி அழைப்பேன் - நான் ??!! 


ராமனை அவதார புருஷன்,

மரியாதா புருஷோத்தமன் என்று

சொல்ல கேட்டிருக்கேன்,

நானோ அவரை கண்டதில்லை.


நிலையற்ற இம்மானிட உலகில்

நான் கண்டதென்னவோ

மரியாதை புருஷராய்

வாழ்ந்து காட்டிய 

என் அப்பாவை மட்டுமே !! 


அப்பா


ச்சீஎன்ற சொல் கூட

உமது அகராதியில் அவச்சொல்

அல்லவோ - அச் சொல்லிட்டு கூட,

நீர் எவரையும் வென்சதல்லவோ !! 


உமது ஒரு பார்வையும்,

உமது ஒரு சொல்லும்

இந்த மாதிரி எண்ணம் கூட எப்படி வருது

ஒன்று மட்டும் போதுமே,

என்னை கூனி குருக செய்திட !! 

நான் செய்த தப்பை உணர்ந்திட !! 


தாயுமானவரேஎங்களின் ஆனிவேரே,

என்னை சிற்பி போல் செதுக்கியவரே !! 


நற் பண்பினை தந்தாய் 

எவரையும் சம்மாய் மதிக்கவைத்தாய் !!

நேர்மையை கற்பித்தாய்,

நேர் கொண்ட பார்வையையும் தந்தாய் !!


தேச பக்தியை போதித்தாய்,

கடமையை செய் 

பலனை எதிர்பாராதே என்றாய்

தைறியத்தை தந்தாய்

தன்னிறைவுடன் இருக்க கற்பித்தாய் !!


பொருட்செல்வம் மேல் 

பிடிப்பு வைக்காதே என்றாய்

செய்யும் செயலில் பெருமை

கொள் என்றாய் !! 


அடுத்தவரை புறம் பேசுவது

குறை சொல்வது - உமக்கு 

அறவே புடிக்காது - அதை 

நீர் ஊக்குவித்ததும் இல்லை.


பள்ளி நாட்கள் முதல் இன்று வரை

நண்பர்கள் வட்டாரத்தில் பலர்

என்னில் உள்ள - அரசியல், பயணம்

க்ரிக்கெட், டென்னிஸ், கால்பந்து

என்று விரிந்த ஆர்வத்தை கண்டு

வியந்த்ததுண்டு - அவை அனைத்தும்

பத்து வயதிலிருந்தே வித்திட்டது 

நீர் அல்லவோ !! 


கருணாமூர்த்தியே !! உமது கருணையின்

எடுத்து காட்டாக எதை சொல்ல -


வீட்டிற்குள் நுழைந்து விட்ட கட்டுவிரியனை கூட

அடிக்காதீற்கள், தள்ளி விட்டால் சென்று விடும்

அதன் இடத்தில் நாம் வீடுகள் 

கட்டி உள்ளோம் - என்று சொல்வீரே 

அதை சொல்லவா, இல்லை ..


மதியம் உச்சி வெயிலில், வெகு முதிய 

காலணி தைக்கும் தாத்தா தள்ளாடி 

வரும் பொது, அவருக்காக நன்றாக உள்ள

காலனியை கூட கிழித்து அவருக்கு ஒரு

பணியை தந்து அவரின் சுயமறியாதை

கெடாமல் அன்பாய் அவரை வீட்டிற்க்குள்

அழைத்து இலை சாப்பாடும் குடுத்து

அனுப்பின நாட்களை தான், சொல்லவா !! 


இல்லை, நான் நண்பர்களுடன் பேசும்

ஸ்வாரஸ்யத்தில் செடி, கொடிகளின்

இலையை பரிப்பதை கண்டு - அதற்க்கும்

உயிர் உண்டு என எனக்கு

புரிய வைத்ததை சொல்லவா, இல்லை


உமது பேத்திகள், தவழும் தருணங்களில்

வீட்டில் உள்ள கட்எரும்பை பிடித்து

நசுக்க எத்தனிக்கும் பொது - அதை

தடுத்து அவர்களிடம் இருந்து 

காப்பாற்றுவீரே, அதை சொல்லவா !!


இல்லை, நம் வீட்டில் எப்போழுதும்

அடிப்பட்ட ஒரு புறாவோ, ஒரு அணிலோ

கிளியோ, பூனையோ, எதோ ஒரு ஜீவ ராசி

உன் கருணை, கவணிப்பால் உயிர் பிழைத்து 

தங்கி சென்ற நாட்களை தான் எடுத்து சொல்லவா !! 


அப்பா.. நீர் இன்றி அணுவும்

அசைந்ததில்லை எம்முலகில் 

நீர் அவசர அவசரமாக எங்களை பிரிந்து 

இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது !! 

ஆனால் இன்னும் நாங்கள் 

செயல்லற்று இருக்கிறோம் !! 


அழுதால் உமக்கு புடிக்காது

எனக்கு அதுவும் தெரியும் - எனவே

அப்பா .. நீங்கள் போட்ட

பாதையில் தான் எப்பொழுதும்

நாங்கள் பயணித்தோம்

இனி வரும் நாட்களிலும்

உங்களை பெருமை

படுத்துவதாகவே வாழ்வோம் !!!